ஏகஇறைவனின் திருப்பெயரால்...
إِنَّمَا الْمُؤْمِنُونَ
إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ
تُرْحَمُونَ {10}
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். 49:13.
மனுதர்மத்தை உடைத்தெறிந்து மனித தர்மத்தை நிலைநாட்டிய
திருக்குர்ஆன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
திருக்குர்ஆன் இறக்கி அருளப்படுவதற்கு முன்பு மனித சமுதாயத்தில் ஆண்டான் – அடிமை>
உயர்ந்தோன் – தாழ்ந்தோன்> கருப்பன்
- சிவப்பன் எனும் வேற்றுமையும்> உயர்வு-தாழ்வும் தலைவிரித்தாடியது
உலகம் முழுவதிலும் எத்தனையோ சமூக நீதிக் காவலர்கள் உருவானார்கள் அவர்களால் எத்தனையோ
சமூகநீதி போராட்டங்கள் நடத்தப்பட்டன> எத்தனையோ விடுதலை
உணர்வுகளைத் தூண்டும் விழிப்புணர்வு நூல்கள் எழுதப்பட்டன. அவைகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆனது.
ஆனால் அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைத்தது திருக்குர்ஆன் மட்டுமே என்றால் மிகையாகாது.
அதனால் அடிமைத் தலையிலிருந்து விடுதலை அடைந்த மக்கள் திருக்குர்ஆனை சங்கை செய்ய கடமைப்பட்டுள்ளனர்.
ஏன் ?
திருக்குர்ஆனுக்கு முந்தைய நிலை ஒரு ஃப்ளாஷ்பேக்
பரந்து விரிந்த இந்திய பெருநாட்டிற்குள் கைபர் கணவாய் வழியாக
ஆடுமாடுகளை>
மேய்த்துக் கொண்டு நாடோடிகளாக நுழைந்த ஆரியக் கூட்டம் வெளி உலகம்
அறியாத அப்பாவிகளாக வாழ்ந்து கொண்டிருந்த மண்ணின் மைந்தர்களாகிய ஆதி திராவிடர்களுடைய
அறியாமையை பயன்படுத்தி சிலை வணக்கத்தைப் புகுத்தி தங்களுடைய வயிற்றுப் பிழைப்பை
தொடங்கினர்.
இவர்கள் அரசியலில் கால்பதித்து அரசு அதிகாரத்தை கைப்பற்றி கல்வி
மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு போதிய இடஒடுக்கீடுகளை ஒதுக்கிக் கொள்வதற்கு
முன்புவரை அவர்களது வயிற்றுப் பிழைப்பு கோயிலுக்கு வழங்கும் பிரசாதமும்>
காணிக்கைகளும் தான்.
தாங்கள் தேவனுடைய தலையில் பிறந்ததாகவும் அதனால் தாங்களே வேதத்தை
ஓதவும்>
பூஜை புனஷ்காரம் செய்யவும் தகுதியானவர்கள் என்றுக்கூறி கோயில்
நிர்வாகத்தை ''ஆரிய லைஃப் இன்ஷூரன்ஸ் '' செய்து
கொண்டனர்.
அதனால் சொந்த மண்ணில் பிறந்தவர்களை தேவனுடைய காலில் பிறந்ததாக
கூறி அவர்களுக்கு சூத்திரர்கள் என்ற இழிபெயர் சூட்டி தீண்டத் தகாதவர்களாக்கி ஊர் கோடியில் பன்றிகளுடன் ஒதுக்கி விட்டு
அவர்கள் வாழும் பகுதிகளுக்கு ''சேரிகள்'' என்று பெயர் சூட்டியும்> தங்களுடைய
குடியிருப்பை கோயிலைச் சுற்றி அமைத்துக் கொண்டு அதற்கு ''அக்ரஹாரம்'' என்று பெயர் சூட்டிக்
கொண்டனர்.
மண்ணின் மைந்தர்களை தீண்டத்தகாதவர்கள் என்ற முத்திரைக் குத்தி
ஒதுக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே இவர்களது கோயில் நிர்வாகத்தில் அவர்கள் தலையிடக் கூடாது
தங்களுடைய வயிற்றுப் பிழைப்பில் கைவைத்து விடக்கூடாது போட்டி வந்து விடக்கூடாது எனும்
முக்கிய நோக்கமாகும்.
அந்த அப்பாவிகள் வந்தேறி ஆரியர்களால் சிறுமைப்படுத்தப் படுவதற்கு
முன்பு தாங்கள் பிறந்த மண்ணில் சுதந்திரமாக சுற்றித் திறிந்தார்கள் இவர்களது வருகைக்குப்பின்
அவர்கள் அடிமையாக்கப்பட்டப்பின் அவர்களது குடியிருப்புக்;களாகிய
சேரிகளை தவிர்த்து பொது இடங்களில் நடக்கக் கூட முடியாத அவலநிலையை அடைந்து கொண்டதுடன்
மற்ற சமுதாயத்து மக்களுடனான சமத்துவமும் பறிக்கப்பட்டு சிறகொடிந்தப் பறவைகளாயினர்.
ஒடுக்கப்பட்ட இந்த மக்களுடைய அவல நிலையை மாற்றி அவர்களது துயர்
துடைக்க எத்தனையோ இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு குரல் கொடுத்தன அவைகளாலும் ஒன்றும்
செய்ய இயலாமல் அவைகளும் ஒரு காலகட்டத்தில் அரசியல் அமைப்புகளாக பரினாமம் பெற்று யாரை
எதிர்த்து யாருக்காக ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் இயக்கங்கள் துவக்கப்பட்டதோ அது
மாற்றப்பட்டு எதிர்க்க வேண்டியவர்களிடமே சட்டமன்ற> பாராளுமன்ற
சீட்டுக்காக சரணடைந்து கையேந்தும் அவலநிலையை அடைந்து கொண்டனர் .
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.368
நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். 49:13.
மனிதன் கடவுளுடைய தலையிலும் பிறக்கவில்லை> காலிலும்
பிறக்கவில்லை ஒரே ஒரு மனிதனே முதலில் படைக்கப்பட்டு அவரிலிருந்து அவருக்கு (பெண்) துணையை
படைக்கப்பட்டு உலகம் முடியும் காலம் வரை பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஒரே அச்சிலிருந்தே
(அந்த இருவரிலிருந்தே) ஏற்றத் தாழ்வு இல்லாமல் படைக்கப் படுகிறது என்பதை ஆணித்தரமாக்
அடித்துரைத்து வந்தேறி ஆரியர்களுடைய செட்டப் நாடகத்தை (மனுதர்மத்தை) உடைத்தெறிந்து
மனித தர்மத்தை நிலைநாட்டியது திருமறைக்குர்ஆன்.
சமத்துவத்தை மட்டும் கூறி விட்டு விடாமல் சகோதரத்துவத்தையும்
சேரத்துக் கூறி விடுதலை முரசு முழங்கி மனு தர்மத்தை சவக்குழிக்கு அனுப்பியது சங்கை
மிக்க குர்ஆன். '' இன்னமா அல்மூஃமினூன இஹ்வா'' முஃமின்கள்
(யாவரும்) சகோதரர்களே ... 49:10
- இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே !
- சகோதரர்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு உண்டாகுமா?
- சகோதரர்களுக்கு மத்தியில் ஆண்டான் அடிமை எனும் சிந்தனை இருக்குமா ?
- சகோதரர்களுக்கு மத்தியில் ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு சிந்தனை வருமா ?
- வராது !
வராமல் இருக்க வேண்டும் என்றால் சகோதரர்களாக ஆகிக் கொள்ள வேண்டும்
வெளியில் இருந்து கொண்டு பெயரளவில் அண்ணன்- தம்பி> மாமன்-
மச்சான் என்று கூறிக் கொண்டிருந்தால் சகோதரர்கள் ஆகமுடியாது முஃமின்கள் (முஸ்லீம்கள்) எனும் இறைநம்பிக்கையாளர்கள் வட்டத்திற்குள் இணைந்துகொள்ள வேண்டும் அவ்வாறு இணைந்து
கொண்டால் ஏற்கனவே உள்ள முஃமின்கள் (முஸ்லீம்கள்) இறைநம்பிக்கையாளுக்கு புதிதாக இணைந்து கொண்டவர்கள்
சகோதரர்கள் எனும் அந்தஸ்த்திற்கு உயர்ந்து விடுவார்கள். சமத்துவம் தாமாக தேடிவரும்.
ஆரியர்களால் அடிமைப் படுத்தப்பட்டிருந்த அப்பாவி ஆதி திராவிடர்கள்
அந்த அடிமை விலங்கை உடைத்தெறிவதற்கு இஸ்லாத்தை நோக்கி அணி அணியாக வந்து இணைந்து கொண்டு
சமத்துவத்தை அடைந்து கொண்டனர்.
அவ்வாறு சூத்திர ( அடிமை ) விலங்கை உடைத்தெறிந்து கொண்டு இஸ்லாத்தை
நோக்கி வந்து இணைந்து கொண்டவர்களே இந்திய முஸ்லிம்களாவார்கள் அவர்களுடைய வாரிசுகளே
இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நானும்> படித்துக் கொண்டிருக்கின்ற
நீங்களுமாவீர்கள்.
இன்று சமுதாயத்தில் எல்லா மனிதர்களைப் போல நாமும் சமத்துவமாக
வாழ்ந்து வருகிறோம் என்றால் திருக்குர்ஆன் நமக்கு விடுதலை வாங்கித் தந்தது என்பதை மறந்திடக்
கூடாது. அதனால் திருக்குர்ஆனை நாம் சங்கை செய்ய கடமைப் பட்டுள்ளோம்.
குர்ஆனை மறந்த மனிதர்களைப் பார்த்து குர்ஆன் கூறுகிறது : ...அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். 3:103
அதனால் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை நோக்கி வந்த அன்பிற்குரிய
இந்திய முஸ்லீம்களே நமது முந்தைய அடிமை நிலையை நினைத்துப் பார்த்து சமத்துவத்தை ஏற்படுத்திக்
கொடுத்த திருக்குர்ஆனை அழகுற ஓதி அது ஏவுகின்ற ஏவல்களை நமது வாழ்க்கையில் கடைபிடித்து
ஒழுகி நடப்பதுடன் அது விலக்கும் விலக்கல்களிலிருந்து முடிந்தவரை விலகிக் கொண்டு வாழ்வதே
குர்ஆனை நாம் சங்கை படுத்தியதாக அவ்லாஹ்விடம் கருதப்படும்.
திருக்குர்ஆன் விடுக்கும் சமத்துவ அறைகூவலை இன்றும் இந்தியாவின்
சேரிகளில் வசிக்கும் நமது முன்னோர்களுக்கு அது எட்டாமல் இருந்து வருகிறது என்பதுடன்
எட்ட விடாமல் அடிமை விலங்கு பூட்டிய ஆதிக்க வர்க்கம் தடுத்துக்கொண்டிருக்கின்றன என்பது
மறுக்கமுடியாத உண்மைகளாகும் அவர்களது செவிப் புலன்களை '' இன்னமா
அல் மூஃமினூன இஹ்வா '' இறைநம்பிக்கையாளர்கள் சகோதரர்களே ! எனும் திருமறை வசனம் அவர்களது செவிப்பறையை தட்டினால் அடுத்த
கனமே அவர்கள் தங்களது அடிமை விலங்குகளை உடைத்துக் கொண்டு இஸ்லாத்தை நோக்கி வருவார்கள் சமத்துவத்தை அடைந்து
கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ் .
அன்பிற்குரிய நோன்பாளிகளே ! திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட
இந்த ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் ஓதி வருவதுடன் அது கூறும் ஏவல - விலக்கல்களை
அமல் படுத்துவீர்களேயானால் அது உங்களுக்கு ரமளானுக்குப் பிறகும் பின் தொடர்ந்து கொள்ளும்
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ
يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ
الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத்
தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே
வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக