சனி, 21 ஜூலை, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
.

நோன்பு துறப்பதை விரைவு படுத்துவோம்.
.
''நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். புகாரி: 1957

''ஆரம்ப நேரத்தில்> (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்'' என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். நூல்: திர்மிதி.

பள்ளிவாசல்களில்
பள்ளிவாசல்களில் சென்று நோன்பு துறப்பதை வழமையாகக் கொண்டவர்களில் சிலர் மிகவும் தாமதமாக செல்கின்றனர் இவ்வாறு செல்பவர்களில் பலருக்கு இஃப்தார் கிடைப்பதில்லை காரணம் பள்ளிவாசல்களில் தயார் செய்யப்படும் இஃப்தார் உணவுகள் முன்கூட்டியே தீர்ந்து விடுவதற்கே  அதிகம் வாய்ப்பு இருக்கிறது அவ்வாறு தீர்ந்து விட்டால் இத்தனை பேருக்கு கொடுத்து இவர்களுக்கு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்ற மனக் கவலை உணவு ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்படுகிறது.

முன்கூட்டியே  வந்து உணவுகளை வாங்கி வவைத்திருப்பவர்கள் கண்டு கொள்ள வில்லை என்றால் அல்லது அவர்கள் முன்கூட்டியே இவர்களைப் போன்று தாமதமாக வந்தவர்களில் சிலரை இணைத்துக் கொண்டிருந்தால் இவர்களால் வெறுமனே திரும்புவதைத் தவிற வேறு வழி இருக்காது.

அதனால் இஃப்தாரை விரைவு படுத்தும் அம்சங்களில் பள்ளிவாசல்களுக்கு சென்று நோன்பு துறப்பவர்கள் முன்கூட்டியே சென்று அமர்ந்து கொண்டு அல்லாஹ் தங்களுக்கு விதியாக்கிய அந்த உணவை அடைந்து கொள்ளலாம். அதனால் உணவு ஏற்பாட்டாளர்களுக்கோ பிறருக்கோ சிரமம் தராதவர்களாக ஆகலாம்.

பாங்கு சொல்லும் வரை குர்ஆன் ஒதுவது> திக்ரு செய்வது போன்ற இறைநினைவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம்

''ஆரம்ப நேரத்தில்> (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்'' என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய விதம் நோன்பு துறந்து சுன்னத்தை ஹயாத்தாக்கிய நற்செயலை செய்ததாகவும்> அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய அடியார்களில் ஒருவராகவும் ஆகமுடியும்.   

வீடுகளில்> ரூம்களில்.
இஃப்தார் நேரத்தில் எதாவது அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிக்குச் சென்றவர்கள் வீட்டை நோக்கி விரைந்து வருவதிலிருந்தும்> பலகாரம் பொறித்தெடுப்பதை நிருத்தி விட்டு சமையலறையிலிருந்து வெளியாவதிலிருந்தும்> உளூ செய்யச் சென்றவர் பாத்ரூமை விட்டு வெளியாவதிலிருந்தும்> இன்னும் பல அலுவல்களை விட்டு டைனிங் ஹாலுக்கு விரைந்து வருவதற்கு தாமதம் செய்யக் கூடாது.

வீடுகளில் இஃப்தாரை தயார் செய்யும் பெண்கள் முன்கூட்டியே தயார் செய்ய முயற்சிக்க வேண்டும் பலகாரம் ஆறி விடும் என்றக் காரணத்தால் பலர் தயார் செய்வதை தாமதப்படுத்துகின்றனர் கடைசி நேரத்தில் உப்பு தீர்ந்து விட்டது> எண்ணெய் தீர்ந்து விட்டது என்றுக் கூறி ஆண்களை கடைக்கு அனுப்புகின்றனர் அவர்கள் கடையிலிரந்து வந்து சேர தாமதமாகின்றது.

வீடுகளில் தாமதப்படுத்தி இஃப்தார் செய்யப்படுவதால் சரியான நேரத்தில் நோன்பு துறக்க முடிவதில்லை> வக்தில் மக்ரிப் தொழுகையையும் தொழ முடிவதில்லை.

அதனால் வீடுகளிலும்> ரூம்களிலும் நோன்பு துறப்பதற்கு ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்து விட்டு பாங்கு சொல்லும் வரை குர்ஆன் ஓதுவது> திக்ரு செய்வது போன்ற இறை நினைவுகளில் ஈடுபடலாம்.

அதனால் 'ஆரம்ப நேரத்தில்> (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்'' என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய விதம் நோன்பு துறந்து சுன்னத்தை ஹயாத்தாக்கிய நற்செயலை செய்ததாகவும்> அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய அடியார்களில் ஒருவராகவும் ஆகமுடியும்.   

இவற்றை விடவும் மேலாக இது வரை நான் பசித்திருந்ததே அல்லாஹ்வுக்காகத் தான் இதுபோல் எப்பொழுதும் நான் பசித்திருந்ததில்லை அதனால் எனக்கு நோன்பு துறக்க விதியாக்கப் பட்ட நேரம் வந்து விட்டமையால் நமது உணவை தேடிக் கொள்வோம் எனும் சிந்தனையில் இஃப்தாரை விரைவு படுத்த வேண்டும்.

நோன்பு துறப்பதை அதன் நேரத்தை கடக்க விடாமல் சரியான நேரத்தில் துறப்பவர்கள் நன்மையில் நீடிப்பார்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் அதை அலட்சியம் செய்யாமல் நன்மையில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற நற்சிந்தனையில் நோன்பு துறப்பதை விரைவு படுத்தி அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார்களில் ஒருவராக நம்மை ஆக்கிக் கொள்ள தயார் படுத்துவோமாக ! 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

கருத்துகள் இல்லை: